சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (08/03) ஞாயிற்றுக்கிழமை ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான மேம்பாட்டு அமைப்பின் வடக்கு கிழக்குக்கான பணிப்பாளர் திருமதி வாசுகி சுதாகரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது மங்கள விளக்கினை பிரபல ஈழத்து பெண் பாடகியும் ஈழத்து திரைப்பட நடிகருமான திருமதி பார்வதி சிவபாதம் அம்மா ஏற்றிவைக்க அதனை தொடர்ந்து
நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சிறுவர் நன்னடத்தை அதிகார சபையின் பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ் கலந்து கொண்டார்.
சிறுவர் பெண்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதையும் அவர்களின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பில் குரல் கொடுக்கும் கலை நிகழ்ச்சிகளும் நாடகங்களும் நடைபெற்றன.
இந்த நிகழ்வுக்கு பல நூற்று கணக்கில் ஈழத்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.