இ. போ. ச. போக்குவரத்து அனுபவங்களை பகிர தொடர்பு இலக்கம் அறிமுகம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் பயணிக்கும்பயணிகள் தங்களுடைய அனுபவங்கள், பரிந்துரைகள் உள்ளிட்ட விடயங்களைஅறியப்படுத்துவதற்கு புதிய செயற்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு பாதுகாப்பான மற்றும் திறமையான பொது போக்குவரத்துசேவைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட திட்டம் என இலங்கைபோக்குவரத்து சபையின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குலதிலக்கதெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த விடயங்களை 070 477 5030 என்ற வட்ஸ் அப் இலக்கத்திற்குஅல்லது 1958 என்ற துரித இலக்கம் www.sltb.lk என்ற இணையத்தளத்தின்மூலம் தெரிவிக்க முடியும்.

Share this Article