இஸ்ரேஸ் ராணுவ தளத்தை சிதைத்த ஏவுகணைகள்!- பதிலடி கொடுத்த ஹிஸ்புல்லா!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இஸ்ரேலின் மெரோன் வான் கட்டுப்பாட்டு தளத்தை ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகளால் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் துணை தலைவர் கொல்லப்பட்டதற்கு முதற்கட்ட பதிலடி இதுவாகும் என்றும் 62 வகை ஏவுகணைகளை வீசி மெரோன் விமான கட்டுப்பாட்டு தளம் தாக்கப்பட்டது என்றும் ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணை தலைவர் ஷேக்சலே-அல்-அரூரி கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்திருந்தது.

அதன்படி இஸ்ரேலின் மெரோன் விமான கட்டுப்பாட்டு தளம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் ஓடு பாதை சேதம் அடைந்துள்ளதாகவும் குறித்த இராணுவ தளத்தில் இருந்து இஸ்ரேலிய விமானப்படையால் போர் விமானங்கள் இயக்க முடியவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதேவேளை இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.

Share this Article