குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்தின் பிரதானசந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஆறு குற்றவாளிகளிடம் தற்போதுமூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.
அதன்படி, இஷாரா செவ்வந்தி, டுப்ளிகேட் இஷாரா என்ற தக்ஷி, ஜே.கே. பாய்மற்றும் ஜஃப்னா சுரேஷ் ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம்ஒப்படைக்கப்பட்டனர்.

கம்பஹா பாபா என்பவர் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவிடமும், நுகேகொடை பபி என்பவர் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவிடமும்ஒப்படைக்கப்பட்டனர்.
இதன்போது, இஷாரா செவ்வந்தியிடமிருந்து சஞ்சீவ கொலைச் சம்பவம்தொடர்பாக பல முக்கிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதாகதெரிவிக்கப்படுகிறது.
குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதானசந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் இலங்கை பொலிஸ்குழுவொன்று அந்நாட்டு பொலிஸாருடன் இணைந்து நடத்திய சிறப்புநடவடிக்கையின் போது சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல உள்ளிட்ட நான்குஅதிகாரிகளால் குறித்த குற்றவாளிகள் குழுவினர் ஸ்ரீலங்கன் விமானம் மூலம்இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
குற்றவாளிகளை ஏற்றி வந்த விமானம் நேற்று (ஒக்.15) மாலை 6.52 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது.
இவ்வாறு அழைத்து வரப்பட்ட குற்றவாளிகள் பலத்த பாதுகாப்பின் கீழ் பலபொலிஸ் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
