இளைஞன் குத்திக் கொலை நள்ளிரவில் பயங்கரம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம் வடமராட்சியின் வல்லையில் உள்ள விருந்தினர் விடுதியின் மதுபானசாலையில் மது அருந்திய இரண்டு தரப்புக்கு இடையில் இடம்பெற்ற வன்முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (02 மே) இரவு நிகழ்ந்துள்ளது. நாச்சிமார் கோவிலடி, திக்கம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரம் குணசோதி (வயது 25) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியதாகவும் இதன்போது போத்தலை உடைத்து குத்தியதில் இளைஞன் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த இளைஞன் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிளந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share this Article