மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ‘இலத்திரனியல் கழிவுகளை சேகரிப்பதன் மூலம் சுற்றாடலை பாதுகாத்தலும் முகாமைத்துவம் செய்தலும்’என்ற தொணிப்பொருளில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் றூபாவதி கேதீஸ்வரன் கலந்து கொண்டு குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித்திட்ட வாரத்தின் வடமாகாணத்திற்கான ஆரம்ப நிகழ்வு வடமாகாண சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் மகேஸ் யல்தொட்ட தலைமையில் கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இன்று தொடக்கம் எதிர்வரும் 11 ஆம் திகதிவரை குறித்த வரை இலத்திரனியல் கழிவுப்பொருட்களை பணிகள் இடம்பெறும் இதன்போது இலத்திரனியல் பொருட்களான கணணி, மடிக்கணணி, தொலைகாட்சி, நிலையான தொலைபேசி, LEDமின்குமிழ், UPS மின்கலம், LED,LCD திரைகள் திரைகள், வீட்டுப்பாவனை மின்சாதனப்பொருட்கள், அலுவலக மின்சாதப்பொருட்கள் போன்றவற்றை மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் சேகரிப்புகளுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.