இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்: பொலிஸில் முறைப்பாடு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலஞ்ச ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் சுலோசனா ஹெட்டியாராச்சிக்குமரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்கெசல்வத்தை பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு கொழும்பு பிரதானநீதவான் பணித்துள்ளார்.

அண்மையில் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் ஹெட்டியாராச்சியும், விசாரணை அதிகாரி திலும் துஷாந்தவும் நீதிமன்ற அறையிலிருந்துவெளியேறிக் கொண்டிருந்தபோது நீதிமன்ற வளாகத்திற்குள் இந்தச் சம்பவம்இடம்பெற்றுள்ளது.

விசாரணையைத் தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்து வெளியேறும்போது கலாநிதிமஹேஷி விஜயரட்னவின் மகள் அவர்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சட்டத்தரணி ஹெட்டியாராச்சி உடனடியாக கொழும்புபிரதான நீதவானுக்கு அறிவித்தார். மேலதிக நடவடிக்கைக்காக கெசல்வத்தைபொலிஸில் உத்தியோகபூர்வ முறைப்பாடு செய்யுமாறு நீதவான் அறிவுறுத்தினார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்கும்ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர், சட்டத்தரணி சுலோசனாஹெட்டியாராச்சி மற்றும் விசாரணை அதிகாரி திலும் துஷாந்த ஆகியோர்கெசல்வத்தை பொலிஸில் இந்தச் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளனர்.

கலாநிதி மஹேஷிகா தாக்கல் செய்த பிணை விண்ணப்பம் குறித்தவிசாரணைகளுக்காக இலஞ்ச ஆணைக்குழு அண்மையில் நீதிமன்றத்தில்ஆஜராகியிருந்தது. பிணை தொடர்பான உத்தரவை ஜூலை 8 இற்கு நீதவான்ஒத்திவைத்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் சிறப்பு நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணரான கலாநிதி மஹேஷி விஜேரத்ன, ஜூன் 17அன்று இலஞ்சம்அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவரது பிணைவிண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, அவர் ஜூலை 8 வரை விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article