இலங்கை வருகைதரவுள்ள உலக வங்கி குழு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2022-23 பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட நெடுஞ்சாலைகள், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை மீண்டும் தொடங்கும் நோக்கில் அடுத்த மாதம் உலக வங்கி குழு இலங்கை வரவுள்ளது.

‘இதன்போது, டிட்வா’ புயலால் ஏற்பட்ட 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சேதங்கள் மற்றும் அதற்கான நிதி உதவி குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் பூர்த்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா பெப்ரவரி 17ஆம் திகதி இலங்கை வருகிறார்.

அவர் 18ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடுவார்.

5 இந்த நிலையில், 5வது மற்றும் 6வது மீளாய்வுகள் வெற்றிகரமாக முடிந்தால், இலங்கைக்கு தலா 350 மில்லியன் டொலர் வீதம் மொத்தம் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கும்.

இதற்கிடையில் இலங்கை அரசாங்கம் தற்போது பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், புயல் சேதங்களில் இருந்து மீளவும், இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகளை மீண்டும் வேகப்படுத்தவும் சர்வதேச அமைப்புகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

Share this Article