இலங்கை வங்கி, வடமாகாணத்தின் முதலாவது முகவர் சேவையினை தொண்டமானாறு உபதபால் அலுவலகத்தில் தொடங்கி வைத்துள்ளது.
இந்த சேவையினூடாக பணம் வைப்பிலிடுதல், பணம் மீளப்பெறல் மற்றும் Bill கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்களை குறித்த உபதபால்அலுவலகதினூடாக மேற்கொள்ள முடியும் என தெரவிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கிளைக்குச்சென்று செய்ய வேண்டிய குறித்த செயற்பாடுகளை இனிவரும்காலங்களில் குறித்த உபதபால் அலுவலகத்தினூடாக செய்யக்கூடியவாறுஇலகுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.