இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரமாகிறது!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகி இன்று (செப். 21) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கைமின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

  இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்பாட்டில் முறைசாராமுன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதன் ஊழியர்கள் கடந்த 17 நாட்களாக சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இன்றுநள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில்விலகவுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்பாட்டில் முறைசாராமுன்மொழிவுகள், ஊழியர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் சட்டவிரோதநடவடிக்கைகள், நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை வழங்குதல் மற்றும்உரிய பதவி உயர்வுகளை வழங்குதல் உள்ளிட்ட 16 கோரிக்கைகளைஅடிப்படையாகக் கொண்டு அவர்கள் இந்த தொழிற்சங்க போராட்டத்தைமுன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article