இலங்கை பரீட்சைத் திணைக்களம் தற்போது 2001 ஆம் ஆண்டிற்கு பின்னர்க.பொ.த (சா/த) மற்றும் (உ/த) பரீட்சைக்கு தோற்றியோரின் பரீட்சைபெறுபேற்றுச் சான்றிதழை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பைவழங்குகிறது.
https://certificate.doenets.lk/ என்ற இணைப்பினூடாக சென்று தரவுகளைபூரணப்படுத்தலாம்.
ஒரு பிரதிக்கு ரூபா 600.00 + தபால் செலவு ரூபா 100.00+ சேவை வரி ரூபா12.50 ஆக மொத்தம் ரூபா 712.50 உடன் வேலை முடியும்.
கட்டணத்தை கடனட்டையை அல்லது அஞ்சல் அலுவகத்தில் செலுத்தியபற்றுச்சீட்டு இலக்கத்தை பயன்படுத்தி செலுத்த முடியும்.
காலை 9.30 மணியளவில் விண்ணப்பித்த 20 நிமிடத்தில் உங்கள் சான்றிதழ்பிரதியெடுக்கப்பட்டு விட்டதாகவும், தொடரும் 20 நிமிடத்தில் தபாலில்சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தொலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததுமட்டுமல்லாமல் இன்று காலையில் சான்றிதழ் கையில் கிடைத்தும் விட்டது.
உண்மையிலேயே தொழினுட்ப வளர்ச்சியை சிறப்பாக கையாளும் பரீட்சைத்திணைக்களத்தின் பணி பாராட்டப்பட வேண்டியதுடன், தொலைவில் இருந்துவருவோருக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாகும்.
அலைச்சல், பிரயாணச் செலவு, மொழி தெரியாமை போன்ற பிரச்சனைகளின்றிஉங்கள் பரீட்சை சான்றிதழை நீங்களும் பெற்றிட கீழே உள்ள இணைப்பைசொடுக்கவும்…
https://certificate.doenets.lk
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், பெலவத்தை, பத்தரமுல்லை
மின்னஞ்சல் : exams@doenets.lk
நேரடி தொலைபேசி : 1911
தொலைபேசி இலக்கம் : +94 11 2786200, +94 11 2784203-4