இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நெடுந்தீவு கிளையின் ஒழுங்குபடுத்தலில்நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள இடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பிரதேச செயலரிடம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நெடுந்தீவு கிளையினால் கையளிக்கப்பட்ட சுகாதாரப் பொதிகள் நேற்றையதினம் (டிசம்பர் 05) தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
இப்பொருட்களை United Nations Population Fund நிறுவனத்தினர் இலங்கைசெஞ்சிலுவை சங்கத்தின் நெடுந்தீவு கிளை ஊடக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.