இலங்கை தமிழ் குடும்பத்துக்கு மலேசியாவில் நடந்த துயரம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையைச் சேர்ந்த மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றிய தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள இவர்களது வீட்டிற்கு அருகில், அவர்கள் ஓட்டிச் சென்ற கார் மற்றுமொரு காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் போது அவர்களின் மகளும் காரில் இருந்த நிலையில், மகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

33 வயது பெண்ணும் 35 வயதான அவரது கணவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article