நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தின் இவ் ஆண்டுக்கான பெருவிழாதிருப்பலி கடந்த டிசம்பர் 03 காலை திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.
ஆலய வருடாந்த திருவிழா வழிபாடுகள் பங்குத்தந்தை அருட்பணிப.பத்திநாதன் அடிகளாரின் நெறிப்படுத்தலுடன் இடம்பெற்ற திருப்பலியில் புனித சவேரியாரின் திருச்சொரூப பவனி இடம்பெற்றதுடன் திருச்சொரூப ஆசீர்வாதமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.