இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தின் கற்கைநெறிகளில் சித்திபெற்றமாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (டிசம்பர் 13) இலங்கை சமுத்திர பல்கலைக்கழக யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தின்உதவிப் பணிப்பாளர் கோ. அருள்சிவம் தலைமையில் யாழ் மாவட்டச் செயலககேட்போர் கூடத்தில் நடைபெற்றது
இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தின்துணைவேந்தர் பேராசிரியர் வசந்த இரட்நாயக்க அவர்களும் கலந்துகொண்டுசிறப்பித்தார்கள்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அரசாங்க அதிபர்தமதுரையில், இப் பயிற்சி நெறியானது மாணவர்களுக்கான வரப்பிரசாதம்எனவும், குறிப்பாக கடலக மாலுமிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள்அதிகமாகவுள்ளதாகவும், தீவுப்பகுதிகளுக்கான தரச் சான்றிதழ் பெற்ற கடலகமாலுமிகள் இல்லை எனவும், இது சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் காத்திரமானபங்களிப்பினை வழங்கும் எனவும் குறிப்பிட்டதுடன், கடற்பாசி வளர்ப்பு மற்றும்கடலட்டை வளர்ப்பு ஆகிய கற்கைநெறிகளில் சித்திபெற்ற மாணவர்களுக்கும்சிறந்த தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும் என்றும், ஒரு பல்கலைக்கழகத்தின்சான்றிதழ் பெறுவது என்பது இலகுவான விடயமில்லை எனவும், மாணவர்களைகெளரவப்படுத்த வேலைப் பளுவுக்கும் மத்தியிலும், கொழும்பிலிருந்து வருகைதந்த இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவர்களைப்பாராட்டி நன்றிகூறியதுடன், எமது மாணவர்களுக்கான – கடலக மாலுமிகளுக்கான தேசிய தொழில் தகைமைச் சான்றிதழ் மட்டம் 04 இனை மட்டம் 05 ற்கு உயர்த்துவதற்கான கற்கை நெறியினை நடாத்த வேண்டும் எனக் கோரிக்கைமுன்வைத்தார். இதன் போது அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைய, தேசியதொழில் தகைமைச் சான்றிதழ் கற்கை நெறியின் மட்டம் 05 இனை நடாத்தநடவடிக்கை எடுப்பதாக இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தின்துணைவேந்தர் பேராசிரியர் வசந்த இரட்நாயக்க அவர்கள் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஶ்ரீமோகனன் அவர்களும், இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தின்பயிற்சிக்கான பணிப்பாளர் சந்தன குமார அவர்களும், யாழ்பல்கலைக்கழகத்தின் மீன்பிடித் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் கே. சிவசாந்தினி அவர்களும் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் உ.தர்சினிஅவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தினால் கடலக மாலுமி கற்கைநெறிக்குதேசிய தொழிற் தகைமைக்கான சான்றிதழ் மட்டம் – 04 இற்கு நடாத்தப்பட்டமதிப்பீட்டு பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கும் மற்றும் கடற்பாசி வளர்ப்புமற்றும் கடலட்டை வளர்ப்பு ஆகிய கற்கைநெறிகளில் சித்திபெற்றமாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், IOM நிறுவன இணைப்பாளர், சமுத்திரபல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்துகொண்டார்கள்.