இலங்கையில் முதன்முறையாக தூதரகம் திறக்க இஸ்ரேல் ஆர்வம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கையில் முதன்முறையாக தூதரகம் ஒன்றை நிறுவுவதில் இஸ்ரேல் அரசு ஆர்வம் காட்டுவதாக, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் மத்திய கிழக்கு பிரிவு தலைவர் ஜொனதன் சிட்கா தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து இஸ்ரேல் பயணம் செய்த ஊடகவியலாளர்கள் குழுவுடன் நடைபெற்ற சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

தூதரகம் நிறுவுவதற்கான திகதி இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், இலங்கையில் தூதரகம் ஒன்றைத் தொடங்குவதற்கான விருப்பம் இஸ்ரேல் அரசிற்கு இருப்பதை அவர் வலியுறுத்தினார்.

மேலும், இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கவும் இஸ்ரேல் அரசு ஆர்வமாக உள்ளதாகவும் ஜொனதன் சிட்கா குறிப்பிட்டுள்ளார்.

Share this Article