லைக்கா ஞானம் அறக்கட்டளை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து (FFSL) நாட்டின் காற்பந்துதுறையில் ஒரு புதிய மைல்கல்லை அடையும் முயற்சியாக 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்டப்போட்டித் தொடர் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் போட்டிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு, தாஜ் சமுத்ராஹோட்டலில் 27.05.2024 திங்கள் அன்று இடம்பெற்றது.
நிகழ்வில் லைக்கா குழுமத்தின் ஸ்தாபகத் தலைவரும், லைக்கா ஞானம்அறக்கட்டளையின் நிறுவுனருமான திரு. அல்லிராஜா சுபாஸ்கரன், லைக்காஹெல்த்தின் தலைவரும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணைநிறுவுனருமான பிரேமா சுபாஸ்கரன், லைக்கா குழுமத்தின் பிரதித் தலைவர்பிரேம் சிவசாமி, இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் மற்றும்லைக்கா குழுமத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பாக லைக்கா ஞானம் அறக்கட்டளையுடன் இணைந்துஇலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“ஆசியப் பிராந்தியத்தில் காற்பந்துத்துறையினை உயர்தரத்தில் வலுப்படுத்தும் நோக்கில் இந்தசெயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, தொழில்முறை வீரர்கள்மற்றும் பயிற்சியாளர்களை இணைத்துக்கொண்டு இளம் வீரர்கள் தேசியஅணியை அடைய தெளிவான பாதையை வழங்குவதை குறித்த செயற்றிட்டம்நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தில் நாடளாவிய ரீதியில் 55 நகரங்களில் இருந்து 19 வயதிற்குட்பட்ட440 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், குறித்த சுற்றுப்போட்டியில்முதற்கட்டத்தில் 11,000 வீரர்கள், 2,500 விளையாட்டுக் கழகங்களின்அதிகாரிகள், 1,000க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள்பங்குபெறவுள்ளனர்.
போட்டியின் இறுதிக் கட்டம் 24 மாவட்ட அணிகளில் முடிவடைவதுடன், சிறந்தஅணிகள் தங்கள் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இறுதிக்கிண்ணத்திற்காக மோதவுள்ளன.குறித்த காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் எதிர்வரும் ஜீலை மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கவுள்ளதுடன், இதற்கு தேசிய மற்றும் சர்வதேச அனுசரணையாளர்கள் அனுசரணைவழங்குகின்றனர்.
லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான, திரு அல்லிராஜா சுபாஸ்கரன்மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லைக்கா ஞானம் அறக்கட்டளையானது இலங்கையின்இளைஞர் யுவதிகளை காற்ப்பந்தாட்டத்துறையில் வலுப்படுத்தும் நோக்கில்இலங்கை காற்பந்தாட்டச் சம்மேளனத்துடன் தற்போது கைகோர்த்துள்ளது.
இச்செயற்திட்டத்தின் ஊடாக லைக்கா ஞானம் அறக்கட்டளையானது அனைத்துசமூகத்தினருக்கும் காற்பந்து விளையாட்டை நீண்ட காலத்திற்குஊக்குவிப்பதற்கு உறுதிபூண்டுள்ளது.
லைகா ஞானம் அறக்கட்டளையானது, சுகாதாரம், கல்வி, விவசாயம், இளைஞர்வலுவூட்டல்;, மற்றும் சமூக மேம்பாடு போன்ற முக்கியமான துறைகளில் கவனம்செலுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் சமூக வளர்ச்சித் திட்டங்களைமுன்னெடுத்து வருகின்றது.குறித்த காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினைநடத்துவதற்கு பிரதான பங்காளராக லைகா ஞானம் அறக்கட்டளைவிளங்குவதுடன், ஊடக மற்றும் தனியார் அனுசரணை நிறுவனங்களும்இணைந்து கொண்டுள்ளன” எனக் குறித்த அறிக்கையில் சமூகப் பொறுப்புணர்வுமற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும்வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதே ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும்.