இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வெளிநாட்டு நிபுணர்களுக்கான புதிய டிஜிட்டல் நோமாட் வீசா வகையை அறிமுகப்படுத்துவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவித்துள்ளது.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், தொலைதூர வேலைகளுக்கான முதன்மையான சர்வதேச இடமாக இலங்கையை ஊக்குவிப்பதற்கும் ஒரு மைல்கல் நடவடிக்கையாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு வெளிநாட்டவரும், அவர்களின் மனைவி மற்றும் சார்ந்திருப்பவர்களுடன் சேர்ந்து, இந்தப் பிரிவின் கீழ் வீசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வெளியே பதிவு என்ற போதும் விண்ணப்பதாரர் இலங்கைக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட ஒரு வணிகத்தில் பணிபுரிபவராகவோ அல்லது சொந்தமாகவோ இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் முதன்மை விண்ணப்பதாரர் இலங்கைக்கு குறைந்தபட்சம் மாதத்திற்கு 2,000 அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணயத்தை அனுப்ப வேண்டும்.

இரண்டுக்கும் மேற்பட்ட சார்புடையவர்கள் இருந்தால், ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் மாதத்திற்கு 500 அமெரிக்க டொலர்கள் கூடுதலாக அனுப்பப்பட வேண்டும்.

Share this Article