இலங்கையில் கடந்த 24 மணி நேரத்துக்குள் இரு தடவைகள் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், இலங்கையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளமை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மொனராகலை மாவட்டத்துக்கு உட்பட்ட வெல்லவாய, புத்தல மற்றும் ஹந்தபஹன்கல ஆகிய இடங்களில் நேற்றுக் காலை 3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் 2.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.