2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் திகதி தொடங்கி 2024 செப்டம்பர் 24ஆம் திகதி நள்ளிரவில் கலைக்கப்பட்ட இலங்கையின் 9ஆம் நாடாளுமன்றத்தின் காலக்கட்டத்தில் 167 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை இலங்கை நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
9ஆம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்களின் விவரங்கள்:
- 2020 ஆம் ஆண்டு: அரசாங்க சட்டமூலங்கள் 07, தனியார் உறுப்பினர் சட்டமூலங்கள் 00
- 2021 ஆம் ஆண்டு: அரசாங்க சட்டமூலங்கள் 30, தனியார் உறுப்பினர் சட்டமூலங்கள் 00
- 2022 ஆம் ஆண்டு: அரசாங்க சட்டமூலங்கள் 44, தனியார் உறுப்பினர் சட்டமூலங்கள் 02
- 2023 ஆம் ஆண்டு: அரசாங்க சட்டமூலங்கள் 29, தனியார் உறுப்பினர் சட்டமூலங்கள் 05
- 2024 ஆம் ஆண்டு: அரசாங்க சட்டமூலங்கள் 36, தனியார் உறுப்பினர் சட்டமூலங்கள் 14
மொத்தம்: அரசாங்க சட்டமூலங்கள் 146, தனியார் உறுப்பினர் சட்டமூலங்கள் 21, மொத்தம் 167 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த காலகட்டத்தில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிடத்தக்க சில முக்கிய சட்டங்கள்:
- 2023 ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம்
- 2023 ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நாடாளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலக சட்டம்
- 2023 ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டம்
- 2023 ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டம்
- 2023 ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
- 2023 ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டம்
- 2024 ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டம்
- 2024 ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டம்
- 2024 ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க பெண்களின் வலுவூட்டல் சட்டம்
- 2024 ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க பகிரங்க நிதிசாரான முகாமைத்துவம் சட்டம்
- 2024 ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க பொருளாதார நிலைமாற்றம் சட்டம்
இவை 9ஆம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான சட்டங்களாகும்.