இஸ்ரேலில் விவசாயத் துறையில் ஒரே முறையில் ஆகக்கூடிய எண்ணிக்கையில் தொழில் வாய்ப்புக்களை பெற்ற, 211 பேரைக்கொண்ட மற்றுமொரு குழுவினர் 27ஆம் திகதி விசேட விமானம் மூலம் இஸ்ரேலுக்கு பயணமானார்கள்
இஸ்ரேலுக்கு செல்லும் இவர்களை தெளிவுபடுத்துவதற்காக விசேட நிகழ்ச்சியொன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த தொழில் வாய்ப்பின் மூலம் பெறப்படும் பணத்தின் ஊடாக தமது குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதுடன், சட்ட விதிகளுக்கு அமைவாக வங்கி கட்டமைப்பு ஊடாக பணத்தை அனுப்பி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த பங்களிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இஸ்ரேலில் பணிபுரிபவர்கள் இலங்கையை பிரதி நிதித்துவப்படுத்துவதாகவும், அதன் அடிப்படையில் நாட்டின் நற்பெயரை மேம்படுத்துவதற்காக தார்மீகக் கடமையை முன்னெடுப்பதன் அவசியத்தையும் அமைச்சர் இதன் போது வலியுறுத்தினார்.