இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 5 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் நற்சான்றுப் பத்திரங்கள் கையளித்தனர்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (நவம்பர் 13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை அளித்தனர்.

அவர்களில், கனடாவின் உயர் ஸ்தானிகர் இசபெல் மாரி கெதரின் மார்ட்டின், நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் வீபே ஜேகோப் டி போயர், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மெத்யூ ஜான் டக்வேர்த், அல்ஜீரியா மக்கள் ஜனநாயகக் குடியரசின் தூதுவர் அப்துநோர் ஹொலிஃபி மற்றும் அயர்லாந்து ஜனநாயகக் குடியரசின் தூதுவர் பெனடிக்ட் ஹஸ்குல்டிசன் ஆகியோர் அடங்குவர்.

இந்நிகழ்வின் போது, அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்தார்.

Share this Article