யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் தாய் மாமனும் 3 வயதான மருமகனும்வயல் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (பெப். 17) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்தெரிவித்தார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வட்டுக்கோட்டை தெற்கு பகுதியினை சேர்ந்த பெருமாள் மகிந்தன் மற்றும்குறித்த நபரின் தங்கை, மனைவி மற்றும் மருமகனான தனுசன் டனுசன்ஆகியோர் துணவி பகுதிக்கு சென்றுவிட்டு மீள தமது வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
இதன்பொழுது பெருமாள் மகிந்தன் தனது மருமகனான தனுசனை துவிச்சக்கரவண்டியில் ஏற்றிக் கொண்டு முன்னால் சென்றுள்ளார். இந்நிலையில், சற்று நேரம்கழித்து குறித்த வீதியால் வருகை தந்த தங்கை மற்றும் மனைவி வீதியில் நின்றதுவிச்சக்கர வண்டியினை அவதானித்து தமது 3 வயது பிள்ளையைதேடியுள்ளனர்.
இந்நிலையில் மூன்று வயது சிறுவன் வயல் கிணற்றில் மிதந்த நிலையில் அவரைமீட்டு நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த இருவரும் யாழ் போதனாவைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுதும் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
மேலும் குறித்த இடத்திற்கு தொடர்ந்து விரைந்த பொலிசார் வெளியே கழற்றிவைத்திருந்த பாதணியை அடிப்படையாக கொண்டு கிணற்றில் தேடுதலைமேற்கொண்டுள்ளனர்.
இதன் பொழுது குறித்த சிறுவனின் தாய் மாமனின் சடலத்தினையும் கைப்பற்றினர். தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு உடலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் தாய் மாமன் வயலை காட்டுவதற்கு சிறுவனை அழைத்து சென்றவேளைசிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து பின்னர் அவனை காப்பாற்ற குறித்த நபர்கிணற்றில் குதித்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கலாம் எனபொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்