இரண்டாம் கட்ட காசோலைகளை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தீவகப் பகுதியில் கொடுவா மீன் வளர்ப்பு மற்றும் பாசி வளர்ப்பு போன்ற ஊக்குவிப்பு  திட்டங்களுக்கு தெரிவு

செய்யப்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட காசோலைகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டன.

வேலணை பிரதேசத்தில் நடைபெற்ற காசோலை வழங்கும் நிகழ்வில், முதற் கட்ட காசோலையைப் பெற்றுக் கொண்ட பயனாளர்களின் வெளிப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்த கடற்றொழில் அமைச்சர், சிறந்த செயற்பாடுகளை வெளிப்படுத்தியவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததூடன், இந்த ஊக்குவிப்புத் தொகையை ஆதாரமாகக் கொண்டு எதிர்காலத்தில் சுயமாக குறித்த வளர்புக்களை மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொருவரும் தம்மை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சரின் முயற்சினால் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள குறித்த ஊக்குவிப்பு திட்டத்தின் அடிப்படையில் கொடுவா மீன் வளர்ப்பிற்கு 250,000 ரூபாய்களும் கடல் பாசி வளர்ப்பிற்காக தலா ஒரு இலட்சம் ரூபாய்களும் வழங்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது

Share this Article