இரணைமடு சந்தி – பரந்தன் சந்தி வரை கனரக வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி ஏ9 வீதி இரணைமடு சந்தி தொடக்கம் பரந்தன் சந்திர வரையான பகுதியில் ரிப்பர் வாகனம் உட்பட கனரக வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது என கிளிநொச்சி மாவட்டச் செயலக  கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரச அதிபர்  தலைமையில் வீதி விபத்துக்களை தடுத்துல் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் காலை 7.00 மணி தொடக்கம் 8.00 மணிவரைக்கும் பின்னர் பகல் 1.00 மணி தொடக்கம் 2.00 மணி வரைக்கும்  இரணைமடு சந்தி மற்றும் பரந்தன் சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் ஏ9 வீதியில் ரிப்பர் வாகனம் உட்பட கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

பாடசாலைகள் ஆரம்பித்தல் நிறைவுறும் நேரத்தை கருத்தில் எடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாக கிளிநொச்சி பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர தெரிவித்துள்ளார்

.

Share this Article
Leave a comment