கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் நிலமைகளை பார்வையிட்டதோடு அனர்த்த நிலமையில் கையாளப்பட்ட நீர் முகாமைத்துவ செயற்பாடுகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நீர்ப்பாச அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார் பிரதமர் ஹரிணி அமரசூரிய.
இன்றைய தினம் (21/12) கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார்.
அதன்பின்னர் இரணைமடு நீர்ப்பாசன குளத்தினை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது