இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியுள்ளது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக நீர் நிலைகளிற்கான நீர் வருகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 26 அடி 1அங்குலமாக உயர்ந்துள்ளது.
36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடு குளத்திற்கான நீர்வருகை தற்போது குறைந்துள்ளதாகவும், தொடர்ந்தும் மழை பெய்தால் நீர் வருகை அதிகரிக்கலாம் என்பதால், மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது

Share this Article