இயந்திரம் மூலம் நாற்று நடுகை பயிற்சியும் செயல்முறையும் பரந்தன் பன்னங்கண்டி பகுதியில் நடைபெற்றது.
கிளிநொச்சி விவசாயப் பணியகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி கமக்கார அமைப்புக்கள் மற்றும் விவசாயிகள், கமநல சேவை பணிமனையினர், விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் இதன்போது கூறுகையில்: இயந்திரம் மூலம் நாற்று நடுகையில் பெறப்படுகின்ற ஒரு ஏக்கருக்கான விளைச்சல் 150 புசலாகவும், சாதாரணமாக வீச்சு விதைப்பில் 120 புசலாகவும் காணப்படுகிறது.
இவ் நாற்று நடுகை முறை மூலம் அதிக விளைச்சலை பெற முடியும். பயிர்ச் செய்கையின் போது குறைந்தளவிலான உரங்களே பயன்படுத்தப்படுகிறது.
விதைப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு 7 கிலோ கிராம் நெல் போதுமானதாகவும் குறைந்த செலவில் அதிகளவிலான விளைச்சலை பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.(க)