இம் மாதம் குறிப்பிட்ட நாட்களில் வவுனியாவில் மின்தடை ஏற்படவுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இம்மாதம் 10, 14, 15, 16, 17, 18, 19 ஆம் , ஆகிய தினங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை அத்தியாவசிய பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில்,

10ம் திகதி வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்திலும்

14ம் திகதி வவுனியா புதிய சின்னக்குளம் கிராம் , அரசடிக்குளம் பகுதியிலும்

15ம் திகதி வவுனியா புதிய சின்னக்குளம் கிராம் இ அரசடிக்குளம் பகுதியிலும்

16ம் திகதி வவுனியா கோவிற்குளம் 10வது ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையிலான பகுதியிலும்

17ம் திகதி வவுனியா அரசடிக்குளம் பகுதியிலும்

18ம் திகதி வன்னி இராணுவ படை முகாம் , வன்னி விமானப்படை முகாம் , விமானப்படை றேடார் பகுதியிலும்

19ம் திகதி வவுனியா கோவிற்குளம் 10ம் ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையிலும் , மகாகச்சக்கொடிய கிராமம் ஆகிய இடங்களிலும் மின் தடை அமுல் படுத்தப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அனைவரும் மின்தடை அமுல்ப்படுத்தப்படும் காலப்பகுதியில் தேவையான முன் ஆயத்த நடவடிக்கைளை எடுக்குமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share this Article