இன்றைய நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைகின்றன என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு, இன்று (மே 3) நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சார அமைதி காலம் அமலுக்கு வருகிறது. இதற்கமைய, அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவில் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏல். ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

வரும் மே 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திற்குப் பிறகு எந்த வேட்பாளரும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி இருக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இன்று நடைபெறும் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் காணொளிகள் மற்றும் விபரங்கள் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளில் ஒரே ஒரு முக்கிய செய்தியாக மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Article