வரலட்சுமி விரதம் இன்றையதினம் (ஓகஸ்ட் 08) அனுஷ்டிக்கப்படுகிறது.
செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை வீட்டுக்கு வரவேற்கும் நாள்தான்வரலட்சுமி விரத நாள். இந்த நாளில் வரலட்சுமி விரதத்தை யார்வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்.
குறிப்பாக சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். வரலட்சுமிவிரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது கடைபிடித்து வரும் வீட்டில் வறுமை, திருமணத் தடை நீங்கும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கணவரின் நீண்ட ஆயுளுக்காக மேற்கொள்ளப்படும் இந்த விரதத்தை மேற்கொண்டு, மகாலட்சுமியை வழிபட்டால் கணவன்-மனைவியிடையிலான மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து நெருக்கம் அதிகரிக்கும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.
பொதுவாக, ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கைலும் நோன்பு கயிறுகட்டிக்கொள்ளவேண்டும் என்பதே வழக்கம்.
ஆனாலும் வரலட்சுமி பூஜை மற்றும் விரத பூஜையில் பங்கேற்கும் பெண்கள்தங்களின் வலது கையில் நோன்பு கயிறை கட்டிக்கொள்ளவேண்டும் என்கிறதுசாஸ்திரம்.
வீட்டில் மஹாலட்சுமிக்கு வெற்றிலை பாக்கு, 2 வாழைப்பழம் வைத்தும்வழிபடலாம் .
சர்க்கரை பொங்கல் வைத்து வழிபடலாம். இன்றைய நல்ல நாளில் மகாலட்சுமிவழிபட்டு வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று இன்புற்று இருப்போமாக.