குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய வீசா முறையொன்றைநடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும்பணியை இன்று (17) முதல் ஆரம்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும்தயார்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய புதிய வீசா முறைமை, பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள்மற்றும் அது தொடர்பான கட்டணங்கள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கும்காலம் ஆகியவை 27.11.2023 அன்று விசேட வர்த்தமானி மூலம்வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஒருவருட நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 200$ அமெரிக்க டொலர் அறவிடப்படவுள்ளது. அதேவேளை இரண்டு வருட நுழைவுசுற்றுலா விசாவுக்கான கட்டணம் 300$ அமெரிக்க டொலர்களாக உள்ளது. மேலும், 10 வருடங்களுக்கான நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 1000$ அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம்ஐ.எஸ்.எச்.ஜே இலுக்பிட்டிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைதெரிவித்துள்ளார்.