இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கையில் இன்று (மே31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை குறைக்கதீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாயால்குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 355 ரூபாயாகும்.

அதேபோல், ஒரு லீற்றர் டீசலின் விலை 16 ரூபாயால் குறைக்கப்படவுள்ளநிலையில் அதன் புதிய விலை 317 ரூபாயாக இருக்கும்.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாயால் குறைக்கப்படவுள்ளநிலையில் அதன் புதிய விலை 202 ரூபாய் என இலங்கை பெற்றோலியகூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, சூப்பர் டீசல் மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலைகளில்எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியகூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கு சமாந்தரமாக ஏனைய எரிபொருள் விற்பனை முகவர்களான லங்காஐ.ஓ.சி. மற்றும் சைனோபெக் ஆகியனவும் தமது எரிபொருட்களில் விலைகளைதிருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article