இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இன்று நள்ளிரவு முதல் மாதாந்த திருத்தத்தின் அடிப்படையில் எரிபொருள்விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் 6.00 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளநிலையில் அதன் புதியவிலை 293.00 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர்  20.00 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 341.00 ரூபாவாகும்.

ஓட்டோ டீசல் லீற்றர் 12 .00 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன்புதிய விலை 274.00 ரூபாவாகும்.

சூப்பர் டீசல் லீற்றர் 6.00 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதியவிலை 325.00 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் லீற்றர் 5.00 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன்புதிய விலை 178.00 ரூபாவாகும்.

இந்நிலையில், ஐ. ஓ. சி. நிறுவனம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில்விலைத்திருத்தத்திற்கேற்ப திருத்தங்களை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது.

Share this Article