இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்கக்கோரி யாழில் போராட்டத்திற்கு அழைப்பு – டிசம்பர் 12

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) நீரியல்வளத் திணைக்களத்தின் முன்னிருந்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்து யாழ் மாவட்டச் செயலகம் வரை சென்று யாழ் மாவட்டச் செயலக செயற்பாட்டினை முடக்கும் வகையில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்

வடமராட்சி கிழக்கு தொடக்கம் நெடுந்தீவு வரையான மீனவ சங்க பிரதிநிதிகள் இன்றையதினம் (டிசம்பர் 12) காலை யாழ் மாவட்ட நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கிறிஸ்ணன் அகிலன் அவர்களை யாழ் மாவட்ட நீரியல்வளத் திணைக்களத்தில் சந்தித்து கலந்துரையாடிய வேளையில் இதனைத் தெரிவித்துள்ளனர்

இதன்போது இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியால் யாழ் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக இழக்கப்படுவதுடன் அண்மைய நாட்களாக நாகபட்டினம் – காரைக்கால் மீனவர்களின் இழுவைப்படகுகள் வடபகுதி கரையினை அண்மித்து மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்

எனவே வடகடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை அரசாக  நீங்கள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறினால் நாங்கள் கடலில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் இன்றைய சந்திப்பில் பிரதிநிதிகள் பணிப்பாளரிடம் அழுத்தமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வடகடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை எதிர்த்து அடையாளமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர்12) யாழ் மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைந்து யாழ் பண்ணையில் அமைந்துள்ள நீரியல்வளத் திணைக்களத்தின் முன்னிருந்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்து யாழ் மாவட்டச் செயலகம் வரை செல்லவுள்ளோம் என முடிவினை அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article