இந்தியா இழுவைப்படகுகளின் வருகைக்கு எதிராக முல்லையில் இன்று கவனயீர்ப்பு போரட்டம் இடம் பெற்றது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் இன்று (December 15) கடும் மழையினையும் பாராது மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்படி முல்லைத்தீவு கடற்கரையில் குறித்த மீனவர்களது ஆர்ப்பாட்டமானது ஆரம்பித்து, தொடர்ந்து ஊர்வலமாக மாவட்ட செயலகம் வரை சென்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட செயலகம் சென்றதும் தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களுக்கு எதிராகவும், கடற்றொழில் அமைச்சர் மற்றும் அரசு, கடற்படை என்பவற்றிற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். போராட்ட முடிவில் அத்துமீறல் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி, பிரதமர், கடற்றொழில் அமைச்சர் மற்றும் ஆளுநர் உள்ளிட்டவர்களுக்குரிய மகஜர் மாவட்ட செயலர் க.விமலநாதனிடம் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளால கையளிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக எம்பிகளான சாள்ஸ் நிர்மலநாதன், வினோநோகராதலிங்கம், செலவராசா கஜேந்திரன், முன்னாள் எம்பிகளான மாவை சேனாதிராசா, சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Share this Article