இரு நாட்டு பயணிகளிடம் அதிக வரவேற்பு இருப்பதால், நாகையில் இருந்துஇலங்கை காங்கேசன்துறைக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு பயணிகள்கப்பல்இயக்கப்படும் என்று கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் 8-ம் தேதி முதல்வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் சேவைஇருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை – இலங்கை இடையே ‘சிவகங்கை’ என்ற பயணிகள் கப்பல்சேவை கடந்தஆகஸ்ட் 16 தொடங்கியது. அப்போது, இரு மார்க்கத்திலும் தினமும் கப்பல்இயக்கப்பட்டது.
இந்த நிலையில், பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால், செவ்வாய், வியாழன், ஞாயிறு என வாரத்தில் 3 நாட்களாக கப்பல் சேவை குறைக்கப்பட்டது. பின்னர், சனிக்கிழமை உட்பட 4 நாட்களுக்கு கப்பல் சேவை நடைபெற்றது.