இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் தலைமன்னார்ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் இன்று (03) காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த 5 நபர்கள் கடற்படையினரால்விசாரணைக்கு உற்படுத்திய பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார்தாழ்வுபாடு,தலைமன்னார்,வவுனியா,கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37, 39, 24, 26 மற்றும் 38 வயதுடைய ஆண்கள் என தெரிய வந்துள்ளது.
குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடந்த சிலவருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில்வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையிலே குறித்த 5 பேரும் சட்ட விரோதமான முறையில் படகு மூலம்இந்தியாவில் இருந்து தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்தநிலையில் இன்று காலை தலைமன்னார் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட குறித்த 5 சந்தேக நபர்கள் தற்போது தலைமன்னார்பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருவதோடு, விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.