இணையத்தளத்தில் நிதி மோசடி : மேலும் 15 சீனப் பிரஜைகள் கைது !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இணையத்தளத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 15 சீனப்பிரஜைகளைக் கொண்ட மற்றுமொரு குழு, வெலிக்கடை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 15 கணினிகளும், 15 கையடக்கதொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நவம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதி வரை நாட்டின் பல்வேறுபகுதிகளில் இணையத்தள நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சுமார்180 சீனப் பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share this Article