புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட இடைக்கட்டு குளத்தில் 50 ஆயிரம் “திலாப்பியா” மீன்குன்சுகள் விடப்பட்டுள்ளன.
தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை NAQDA நிறுவனத்தின் அனுசரணையில் இந்த மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.
நேற்றுமுன்தினம்(பெப்ரவரி 4) முல்லைத்தீவு மாவட்ட செயலர் க.விமலநாதனால் இந்த செயல் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எதிர்காலத்தில் உணவுத்தட்டுப்பாட்டில் இருந்து மீளுதல், போசாக்கான உணவினை மக்களுக்கு வழங்கும் நோக்குடன் இந்த செயல் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.