இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான டேவிட் கமரூன் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாலஸ்தீன ஆதரவு பேரணியை பொலிஸார் கையாண்ட விதம் குறித்து சுவெல்லா பிரேவர்மென் விமர்சித்ததால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தார்.
டேவிட் கமரூன் கடந்த 2010-2016 முதல் இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்தார். 2016 ஆம் ஆண்டு பிரெக்சிட் பொது வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததால், பிரதமர் பதவியில் இருந்து டேவிட் கெமரூன் பதவி விலகினார்.
அதன்பிறகு கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய பொறுப்புக்கு டேவிட் கமரூன் வந்துள்ளார்.
அதேபோல், பதவி நீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா பிரேவர்மேனுக்கு பதிலாக உள்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார் கிளவர்லி. வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஜேம்ஸ் கிளவர்லி, உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.