கம்பஹாவில் உரிய வருமான உரிமம் ,ஓட்டுநர் உரிமம், காப்பீட்டு சான்றிதழ் என்பன இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டிய 17 வயது பாடசாலை மாணவரின் பெற்றோருக்கு கம்பஹா மேலதிக மகிஸ்திரேட் தம்மிக உடுவெவிதான ரூ.70,000 அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

கம்பஹா போக்குவரத்து பிரிவு பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு விசாரணைக்கு எடுத்தபோது இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.
நீதிமன்றம், சிறார்களுக்கு பொறுப்பின்றி வாகனங்களை வழங்குவது அவர்களின் உயிருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் ஆபத்தானது எனக் குறிப்பிட்டது.