நாட்டில் ஆண் மக்கள்தொகை குறைவது எதிர்காலத்தில் பல சவால்களை உருவாக்கும் அபாயம் இருப்பதாக வடமேற்கு பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவித்துள்ளார்.
1995ஆம் ஆண்டில் ஒவ்வொரு 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 93.7 ஆகக் குறைந்துள்ளதாக அவர் விளக்கியுள்ளார்.
இந்த மாற்றத்திற்கு காரணமாக, பெண்களின் ஆயுட்காலம் அதிகரித்தல், பெண்கள் பிறக்கும் விகிதம் உயர்ந்திருத்தல் மற்றும் இளம் ஆண்கள் வெளிநாடுகளுக்கு அதிகமாக இடம்பெயர்தல் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன என்று பேராசிரியர் அமிந்த மெத்சில் குறிப்பிட்டுள்ளார்.