மாரவில, மரந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண்ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு நேற்றிரவு (ஜூலை22) இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண், அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது இந்ததுப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதன்போது, அவரின் அருகில் இருந்த 10 வயது சிறுவனும்காயமடைந்துள்ளான்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் மாரவில பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர்என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதேநேரம், காயமடைந்த சிறுவன்சிகிச்சைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.