சுற்றுலாத்துறை அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு மேலும் 40 நாடுகளுக்குஇலவச வீசா வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது, இந்த தீர்மானத்தினால்திறைசேரிக்கு 66 மில்லியன் டொலர் வருடாந்த வருமான இழப்பு ஏற்படும்.
எனினும் சுற்றுலாத்துறை ஊடாக அதனை விட அதிக வருமானத்தை பெறஎதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கதலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவொன்று மாலைத்தீவுசெல்லவுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
கொழும்பில் கடந்த வியாழக்கிழமை (ஜூலை24) இடம்பெற்ற நிகழ்வொன்றில்கலந்துகொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையும் பொருளாதாரத்தில்ஸ்திரத்தன்மையும் ஏற்பட்டுள்ளது. உலகலாவிய ரீதியில் பல்வேறுசுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தர ஆரம்பித்துள்ளனர். இதனால்சுற்றுலாத்துறை மேம்பட்டுள்ளது. இதனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்மேலும் 40 நாடுகளுக்கு இலவச வீசா வழங்குவதற்கு கடந்த அமைச்சரவைகூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. அதற்கமைய ஒட்டுமொத்தமாக 47 நாடுகளுக்கு இலவச வீசா வழங்குவதற்குநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதால் நாட்டுக்குநேரடி வருமான இழப்பு ஏற்பட்டது. மேலும் 40 நாடுகளுக்கு இந்த சலுகைவழங்கப்பட்டால் எமக்கு 66 மில்லியன் டொலர் வருடாந்த வருமான இழப்புஏற்படும்.
எவ்வாறிருப்பினும் இந்த நஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு இந்த தீர்மானத்தைஎடுப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தீர்மானித்தார். திறைசேரிக்குஇந்த இழப்பு ஏற்பட்டாலும், சுற்றுலாத்துறையின் ஊடாக மறைமுகமாக இதனைவிட அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு வருமானத்தை அதிகரிப்பதற்கான பொறுப்பினைசுற்றுலாத்துறையினரிடம் நாம் ஒப்படைக்கின்றோம். அமைச்சு என்ற ரீதியில் நாம்கொள்கை வகுப்புக்களையும், ஒழுங்குபடுத்தல்களையும் மேற்கொள்வோம். அவற்றுக்கு அப்பால் துறையை மேம்படுத்தும் பொறுப்பு அதிகாரிகளிடமேகாணப்படுகிறது. எனவே இந்த தீர்மானம் இலகுவானதொன்றல்ல.
கொவிட் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உள்ளிட்ட காரணிகளால் சிலநாடுகளுக்கு விசா வழங்குவது வரையறுக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஒருஉதாரணம் மாலைதீவாகும். மாலைதீவு ஜனாதிபதியின் விசேடஅழைப்பிற்கமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுஅடுத்த வாரம் மாலைத்தீவு செல்லவுள்ளது. இதன் போது அந்த நாட்டுடன்சுற்றுலாத்துறை அபிவிருத்திகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
தற்போது மாலைத்தீவு பிரஜைகளுக்கு குறுகிய கால வீசா வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து மாலைத்தீவு பிரஜைகளுக்கு ஓராண்டுக்கானவீசா வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே வேளை சுகாதாரசுற்றுலாத்துறையையும் மேலும் அபிவிருத்தியடைச் செய்வதற்கும்திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.