நெடுந்தீவு தென்கிழக்கில் அமைந்துள்ள அருள்மிகு முனியப்பர் ஆலயத்தின் வருடாந்த மகா திருக்குளிர்த்தி விழாவினையொட்டி நேற்றையதினம் (ஜூலை 21) மாலை மாட்டுவண்டிச் சவாரி இடம்பெற்றது.
நேற்றையதினம் மாலை முனியப்பர் ஆலயத்தை அண்மித்த பகுதியில் உள்ள குயிந்தா சவாரித்திடலில் மாட்டுவண்டில் சவாரி சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
சவாரிப் போட்டியில் முதலாம் இடத்தினை தம்பிராசா சுஜீவன், இரண்டாம் இடத்தினை யாதவராயர் புவனேஸ்வரன், மூன்றாம் இடத்தினை விக்கினேஸ்வரன் தனுஷன், நான்காம் இடத்தை குமாரசாமி கேதீஸ்வரன் ஆகியோர் பெற்றுக்கொண்டதுடன் இவர்களுக்கான பணப்பரிசில் முறையே 20000.00, 15000.00, 10000.00, 5000.00 என வழங்கிவைக்கப்பட்டமை சிறப்பாகும்.