ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் மீளாய்வுக் கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இம் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் 02, 03 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பிரதேச செயலக அலுவலகங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களிற்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதில், தற்போது பிரதேச செயலகங்கள் ஊடாக அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தேசியஅடையாள அட்டை வழங்கல் தொடர்பான கடமைகளினை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய விடயங்கள் தொடர்பாகவும், திணைக்களங்களினதும் பிரதேச செயலகங்களினதும் கடமைகள், பொறுப்புக்களை வரையறுத்தல் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி, மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் ஆட்பதிவு திணைக்கள உதவி ஆணையாளர், ஆட்பதிவு திணைக்கள பிரதம கணக்காளர், ஆட்பதிவு திணைக்கள இணைப்பாளர், ஆட்பதிவு திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.