யாழ்.புதிய செம்மணி வீதிச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையானஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் காலை 6.00 மணி தொடக்கம்மாலை 6.00 மணிவரை பயணிப்பதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஏனைய பாரவூர்திகள் காலை 7.00 மணி தொடக்கம் காலை 9.00 மணிவரையும் மதியம் 12.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரையும்குறித்த வீதியூடாக பயணிப்பதற்கு தடை விதித்து பொதுப்போக்குவரத்தினைஇலகுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்பள்ளி சிறார்கள், பாடசாலை மாணவர்கள், உத்தியோகத்தர்கள் பணிக்குசெல்லும் நேரங்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள்ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டு பொதுப்போக்குவரத்தினை இலகுபடுத்தும்நோக்குடன் மேற்கூறித்த விடயங்கள் நல்லூர் பிரதேச சபையின் தீர்மானங்கள்ஆக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.
இது தொடர்பான அறிவித்தல் பலகைகள் வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வாகனச் சாரதிகள் குறித்த விதிமுறைகளைப் பின்பற்றுமாறு நல்லூர் பிரதேசசபையின் தவிசாளர் ப.மயூரன் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
,