ஆசனப்பட்டி (seat belt) சட்டம் கடுமையாக அமுல் – மீறுவோரின் உரிமம் இரத்து செய்யப்படும்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எதிர்காலத்தில் ஆசனப்பட்டி சட்டத்தை மேலும் கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இச்சட்டத்தினை மீறும் பேருந்து சாரதிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்தார்.

காலி மாவட்ட போக்குவரத்துக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,350 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்; மேலும் சுமார் 6,000 பேர் காயமடைகின்றனர்.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, போக்குவரத்து அமைச்சு 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான சாலை பாதுகாப்புத் திட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த உள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆசனப்பட்டி கட்டாயமாகும், தொடர்புடைய வர்த்தமானியும் வெளியிடப்படும்.

வருடாந்திர சாலை விபத்து மரண எண்ணிக்கையை 2,300 லிருந்து 2,000 ஆகக் குறைப்பதே இந்நடவடிக்கைகளின் இலக்காகும் என அமைச்சர் தெரிவித்தார்.

Share this Article