அல்லைப்பிட்டியில் அடிபட்ட நிலையில் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அல்லைப்பிட்டியில் நேற்று (செப் 09) காலை ஒரு குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 43 வயதுடைய கஜேந்திரன் என்ற குடும்பஸ்தரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

ஒரு புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு கொண்டிருந்த நிலையில், அதன் அருகிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தில் அடிகாயங்கள் காணப்பட்டுள்ளதுடன், கட்டிடத்தில் இரத்தக் கறைகளும் இருப்பதை அடிப்படையாக கொண்டு, சம்பந்தப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து ஊர்காவல்துறை மற்றும் தடயவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article